Posts

Showing posts with the label NIMBLE'S - N005

வல்லாரை கீரை சூப்

Image
  வல்லாரை சூப் வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். குழந்தைகளுக்குத் தினமும் சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.  48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். காலை, மாலை  100 மில்லி  அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் வலுவடையும. 300 சாப்பிட்டுநாள்  வந்தால் தலைமுடியில் ஏற்படும் நரைகள் மறையும்.