நிம்பள்ஸ் சூப் அண்ட் ஃபுட்ஸ் கம்பெனி
காலை 4 மணி முதல் மணத்தக்காளி கீரை சூப், வாழைத்தண்டு சூப், நவமூலிகை சூப், மற்றும் நெல்லிக் காய் ஜூஸ், சோற்று கற்றாழை ஜூஸ், அருகம்புல் ஜுஸ் கிடைக்கும். விலை 15 ரூபாய் Address : 332, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, ஐய்யனார் குளம் அருகில், வள்ளாலகரம்,மயிலாடுதுறை. சூப் மற்றும் ஜூஸ் வகைகளின் பயன்கள் கொள்ளு சூப்: கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு சூப் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளு சூப். நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது. சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெள...