நிம்பள்ஸ் சூப் அண்ட் ஃபுட்ஸ் கம்பெனி
காலை 4 மணி முதல் மணத்தக்காளி கீரை சூப், வாழைத்தண்டு சூப், நவமூலிகை சூப், மற்றும்
நெல்லிக் காய் ஜூஸ், சோற்று கற்றாழை ஜூஸ், அருகம்புல் ஜுஸ் கிடைக்கும்.
விலை 15 ரூபாய்
Address : 332, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, ஐய்யனார் குளம் அருகில், வள்ளாலகரம்,மயிலாடுதுறை.
சூப் மற்றும் ஜூஸ் வகைகளின் பயன்கள்
கொள்ளு சூப்:
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும்.
உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு சூப் குணப்படுத்தும்.
வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.
எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளு சூப்.
நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.
சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். குறிப்பாக, `கால்சியம் ஆக்சலேட் (Calcium oxalate) வகை சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும்’.
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத்தன்மையை நீக்க உதவும்.
தொண்டை கட்டு:
பாடகர்கள், ஆசிரியர்கள், பேச்சையே தொழிலாக கொண்ட மேடை பேச்சாளர்கள் போன்றவர்கள் தொடர்ந்து பல மணி நேரம் நீர் கூட அருந்தாமல் தொண்டை வறண்டு போகும் அளவிற்கு பேசும் போது தொண்டை பகுதியில் வறட்சி ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்வதோடு, வீக்கம் மற்றும் புண்களும் ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் மணத்தக்காளி கீரையை சூப் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வயிற்று புண்கள்:
காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மணத்தக்காளி கீரை சூப் தினமும் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
அத்தியாவசிய சத்துகள்:
உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. மணத்தக்காளி கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே மணத்தக்காளி கீரை சூப் வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.
ஜுரம், காய்ச்சல்:
ஜுரம் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். அவர்கள் இதை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அதே போல் குறிப்பாக காசநோய் உள்ளவர்கள்.
காச நோய் என்பது ஒரு வகையான கிருமி நமது உடலுக்குள் புகுந்து, நுரையீரல்களில் தங்கி அந்த உறுப்புகளை பதித்து சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல், வறட்டு இருமல் போன்றவற்றை ஏற்படுத்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் ஒரு நோய் ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் சிறிதளவு மணத்தக்காளி கீரை சூப் சாப்பிட்டு வந்தால் நோயின் கடுமையை குறைக்கும்.
கல்லீரல்:
கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு மணத்தக்காளி கீரை சூப் சாப்பிட்டு வந்தால் இந்த நோய்கள் சீக்கிரம் நீங்குவதற்கு துணைபுரியும்.
வாழைத்தண்டு சூப்:கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட வாழைத் தண்டின் அனேக மருத்துவக் குறிப்புகள் பற்றி நமது முன்னோர் ஆயுர்வேத புத்தகங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் கூறியிருக்கிறார்கள். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் தோன்றக்கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். இது அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும், உடலுக்குத் தேவையான உழைப்பு இல்லாததாலும் ஏற்படுகிறது. வாழைத்தண்டு மாதிரி ஸ்லிம்மாக இருக்கா பாரு என்று சில பெண்களைப் பார்த்து வியந்து கூறுவதுண்டு. வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப் படியான சதையைக் குறைத்து உடலை சிக்கென மாற்றும். இதிலுள்ள வைட்டமின் பி6, ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும். நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும். வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாள டைவில் குணமாகும். கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும். இது ஒரு சிறந்த . உடலில் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும்.200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது. வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் அதிகப்படியான ரத்தப் போக்கு, வயிற்று வலி நீங்கும்.இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.
நவமூலிகை சூப்:இதில் கால்சியம்,பாஸ்பரஸ் உள்ளன. இதனால், எலும்பு தொடர்பான நோய்களைப் போக்கும். உடல் வலிமை பெறும்.தசைகள் இறுகும்.உடல் அழியாமல் நீண்ட நாட்கள் நிலைக்கும். ஏதிரிகளின் தொல்லை நீங்கும். ஆண்மை சம்மந்தமான பிரச்சனைகள் விலகும்.
பெண்களுக்கு:
நவ மூலிகை சூப் தொடர்ந்து குடித்து வந்தால், உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்குமுள்ள, வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.தாய்ப்பால் அதிகரிக்கும்.பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும், அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலை குணமாக்கும்.
அடிக்கடி நோயினால் பாதிப்புக்குள்ளானவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த அடிக்கடி கற்றாழை ஜூஸை குடித்தால் பலனை பெறலாம். உயர் ரத்த அழுத்தம் குறையும். சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும்.
கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் உங்கள் வெளிப்புற அழகிற்கு பலன் கிடைப்பதை விட இரு மடங்கு அழகை தரும். உள்ளிருந்து ஊட்டம் அளித்து உங்களை இளமையாக்கும்.
ஹார்மோன் சமநிலையில் இருந்தால் மொத்த உடல் இயக்கத்திலும் பாதிப்பு உண்டாகும். இதற்கு இந்த ஜூஸ் நல்ல மருந்து. ஹார்மோன் சுரப்பை சீர்படுத்துகிறது.
கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி ஜீரண உறுப்புகள் இளமையாகவே இருக்கும். கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றிவிடும்.
அருகம்புல் சாற்றில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது.இரத்தத்தில் உள்ள அதிகபடியான அமிலத்தன்மையை நீக்கி காரத்தன்மையை உருவாக்குகிறது. அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது.
நெல்லிக்காய் ஜூஸ்:
உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வராமலிருக்க வேண்டுமானால், நெல்லிக்காய் ஜூஸை பருகுங்கள்.நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும். சர்க்கரையை நோயை கட்டுப்படுத்தும்.
வல்லாரை சூப்
வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.
இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.
நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்குத் தினமும் சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.
48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும்.
காலை, மாலை 100 மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் வலுவடையும. 300 சாப்பிட்டுநாள் வந்தால் தலைமுடியில் ஏற்படும் நரைகள் மறையும்.
முருங்கை கீரை,பூ,காய் சூப்:
முருங்கை கீரை (murungai keerai) பொதுவாகவே எளிதில் கிடைக்கக் கூடியது. இதன் பயன்கள் ஏராளம். மேலும் முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டன.
முருங்கை கீரை பல்வேறு விதமான சத்துக்களைக் கொண்டது. அதில் விட்டமின் பி, பி2, சி, இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், ஜீங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ் முதலான முக்கிய சத்துக்களைக் குறிப்பிடலாம்.
உடல் சூட்டைத் தணிக்கும்
முருங்கை கீரை சூப் குளிர்ச்சி தன்மை கொண்டது. இதை உட்கொள்வதால் உடல் சூடு தணியும். இதனால் உடலில் வியர்குருகள் வராமல் தடுக்கப்படும்.
வலி குறையும்
முருங்கை கீரை சூப் சாப்பிடுதால் கை, கால் வலிகள் குறையும். மூட்டுவலியும் வராமல் தடுக்கப்படும். முருங்கை கீரையில் நிறைந்து உள்ள கால்சியம் சத்து எலும்புகளைப் பலப்படுத்தும்.
புண்கள் ஆறும்
முருங்கை கீரைகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் மிகவும் குறிப்பானது புண்களை ஆற்றும் தன்மை.வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்கள் அனைத்தும் இதை சாப்பிடுவதால் குணமடையும்.
கண் பார்வை பலம்
முருங்கை கீரை கண்பார்வைக்கு மிகவும் உகந்தது. இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும்.இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் கண்பார்வை சிறப்பான முறையில் வளம் அடையும். குழந்தைகளுக்கு அடிக்கடி முருங்கை கீரையைச் செய்து தருவதால் கண் சம்பந்தமான குறைபாடுகள் வராமல் பாதுகாக்கலாம்.
சருமம் வளம் அடையும்
சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் முருங்கை கீரையை உட்கொள்வதால் குணமடையும். சருமத்தில் ஏற்பட்டுள்ள கொப்புளங்கள் ,பருக்கள் அனைத்தும் முருங்கை கீரையை சாப்பிடுவதால் சரியாகும்.
சிறுநீரகம் வலுவடையும்
முருங்கை கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் சிறப்பாக வெளியேறும். இதில் நிறைந்துள்ள சத்துக்கள் சிறுநீரகத்தை வலுவடையச் செய்யும்.
மனவளம் அடையும்
முருங்கை கீரையில் உள்ள விட்டமின் சி மன நலத்திற்கு உகந்தது. இந்தக் கீரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவாகவே காணப்படுகின்றது. கூடுதலாக நினைவுத்திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்குச் சத்தான இந்தக் கீரையைத் தரலாம்.
இரத்தம் விருத்தியடையும்
இந்தக் கீரை ரத்தசோகையைக் குணப்படுத்துவதற்குப் பெயர் போனது. வாரம் 2 முறை இந்த கீரையை எடுத்துக் கொள்வதால் இரத்தம் சிறப்பான வகையில் விருத்தியடையும். இதற்குக் காரணம் இந்த கீரையில் நிறைந்துள்ள இரும்புச் சத்து தான். அதனால் இந்தக் கீரையை உணவில் எடுப்பவருக்கு ரத்தசோகை வருவதற்கு வாய்ப்பே கிடையாது. கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க இந்த கீரை உதவும்.
இயற்கை வயாகரா
முருங்கை கீரை, பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நாவின் சுவையின்மை பிரச்சனை தீரும். முருங்கை பூவை அரைத்து பால் மற்றும் பனங்கற்கண்டுடன் சேர்த்து அருந்தலாம். இதை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர, தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும். முருங்கை கீரையை அல்லது பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவிக்குள் காதல் அதிகரிக்கும்.
குழந்தை பேற்றைச் சாத்தியப்படுத்தும்
பெண்களின் கர்ப்பப்பை வலுவடைய இந்தக் கீரை உதவுகிறது. இதனால் பெண்களுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதுபோல ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. ஆக இருபாலருக்குமே குழந்தை பாக்கியம் ஏற்பட இந்த கீரை உதவுகிறது.
கூந்தல் செழிப்பாக வளரும்
இந்தக் கீரை கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்றது. இந்தக் கீரையைப் பொரியல் செய்து அடிக்கடி சாப்பிட்டால் கூந்தல் உதிராமல் இருக்கும். மேலும் கூந்தல் கருமையாகச் செழித்து வளரும். இதிலுள்ள சத்துக்கள் முடி உதிர்வை பெருமளவில் கட்டுப்படுத்தும்.
இளமைத் தோற்றம் நீடிக்கும்
இந்தக் கீரைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை வயதான தோற்றம் சீக்கிரம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
சுவாசக் கோளாறு, சளித்தொல்லை நீங்கும்
இந்தக் கீரை சுவாசம் சம்பந்தமான அத்தனைப் பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகிறது. சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற அனைத்து வியாதிகளையும் இந்தக் கீரை குணப்படுத்தத் துணை புரிகிறது.
மலச்சிக்கல் தீரும்
இந்தக் கீரையில் சிறப்பான அளவு நார்ச்சத்து உள்ளது. அதனால் இந்தக் கீரை மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது. இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் இந்த பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
தாய்ப்பால் சுரக்கும்
குழந்தைப் பேறு பெற்ற பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது உகந்தது. இருப்பினும் சில பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாகக் காணப்படும். அவ்வாறான பெண்கள் தங்கள் உணவில் இந்தக் கீரையை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வழியில் அதிகரிக்கும்.
உடல் எடை குறையும்
இதை அடிக்கடி செய்து சாப்பிடுவதால் உடல் எடை மேண்மை அடையும். தேவையில்லா கொழுப்பு குறைந்து, உடல் எடை குறையும். தசைகள் வலுப்பெற்று பொலிவான தோற்றம் பெறுவீர்கள். அதிக எடையுடையவர்கள் இதை தினசரி உணவில் சேர்க்கலாம்.
இதய செயல்பாடு சிறக்கும்
இந்தக் கீரை இதயத்தை வலுப்படுத்த உதவும். இதனால் இதயம் சிறப்பான வகையில் செயல்படும். எனவே இருதய சம்பந்தமான எந்த வியாதியும் நெருங்கவே கூடாது எனில், வாரம் இருமுறையாவது இந்தக் கீரையை உணவில் சேருங்கள்.
வாயுத் தொல்லை நீங்கும்
இந்தக் கீரை குடல் வாயு தொல்லையைச் சரிப்படுத்தும். வாயுக் கோளாறு உள்ளவர்கள் இந்த கீரையைச் சாப்பிடலாம். இந்த கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவும்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்
இந்தக் கீரையில் விட்டமின் சி போதிய அளவில் உள்ளது. இந்த சத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உடலைத் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பற்கள் வலுவடையும்
முருங்கை இலைகளில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை பற்கள் வலுப் பெற உதவும். அதனால் பற்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
முருங்கை கீரையை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
கல்லீரல் சம்பந்தப்பட்டப் பிரச்சினை இருப்பவர்கள் முருங்கை கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்களின் உடலால் இந்தக் கீரையை ஜீரணிக்க இயலாது. அதனால் அவர்களுக்குப் பிரச்சனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அனைவரும் வாருங்கள் உடல்நலம் பெறுங்கள்
தொடர்புக்கு
9791677987