விரை வீக்கம் சரியாக:
ஆண்களை பாடாய்ப்படுத்தும் விதை வீக்கம் பிரச்சனைக்கு இவை சிறந்த மருந்தாக இருக்கும். விரையில் அடிபட்டாலோ கட்டி வந்தாலோ விரையை சுற்றியிருக்கும் சவ்வுபையில் சுரக்கும் சுரப்பு நீர் அதிகமாக சுரந்து விரை வீக்கம் உண்டாகும்.
இவை நிணநீர் பாதையை அடைத்துகொள்வதால் விரைகள் வீக்கத்துக்கு உள்ளாகும். இதனால் விரைகள் மெல்ல பெரிதாகி கொண்டே போகும்.
முறை 1.இந்த கழற்சிக்காய் விதைகளை அரைத்து விரைகள் மீது பற்று போல் தடவி வந்தால் சுரப்பு நீர் பொறுமையாக வெளியேறி வீக்கம் வற்றிவிடும்.
2. கழற்சிக்காய் சூரணம்: (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.)
இந்த கழற்சிக்காய் சூரணத்தை விளக்கெண்ணெயோடு சேர்த்து காய்ச்சி தைலத்தை விதை வீக்கத்தின் மீது தடவி வந்தால் சுரப்பிகளின் வீக்கம் கட்டுக்குள் அடங்கும். விதைப்பை வலி குறையும்.
3. பொடியை ஒரு சிட்டிகை எடுத்து பாலில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் விரைவாதம் நீங்கும். முன்னோர்கள் விரை பிரச்சனைக்கு பயன்படுத்திய மருந்து இது.