முருங்கை கீரை,பூ,காய் சூப்: முருங்கை கீரை (murungai keerai) பொதுவாகவே எளிதில் கிடைக்கக் கூடியது. இதன் பயன்கள் ஏராளம். மேலும் முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டன. முருங்கை கீரை பல்வேறு விதமான சத்துக்களைக் கொண்டது. அதில் விட்டமின் பி, பி2, சி, இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், ஜீங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ் முதலான முக்கிய சத்துக்களைக் குறிப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும் முருங்கை கீரை சூப் குளிர்ச்சி தன்மை கொண்டது. இதை உட்கொள்வதால் உடல் சூடு தணியும். இதனால் உடலில் வியர்குருகள் வராமல் தடுக்கப்படும். வலி குறையும் முருங்கை கீரை சூப் சாப்பிடுதால் கை, கால் வலிகள் குறையும். மூட்டுவலியும் வராமல் தடுக்கப்படும். முருங்கை கீரையில் நிறைந்து உள்ள கால்சியம் சத்து எலும்புகளைப் பலப்படுத்தும். புண்கள் ஆறும் முருங்கை கீரைகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் மிகவும் குறிப்பானது புண்களை ஆற்றும் தன்மை.வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்கள் அனைத்தும் இதை சாப்பிடுவ...