இதயத்தை காக்கும் இன்ப ரகசியம்:
இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய பேருக்கு இதய நோய், சர்க்கரை நோய் வந்து பாதிக்கப்பட்டு ரொம்பவே அவதிப்பட்டு வர்றாங்க.
அப்படிப்பட்டவங்க தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுட்டு வந்தாலே போதும், நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
அதுசரி, நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க. பொதுவா அரிநெல்லின்னு சொல்லக்கூடிய சின்ன நெல்லிக்காயை அதிகமா யாரும் பயன்படுத்துறது இல்லை.
பொதுவா அந்த அரிநெல்லியில அவ்வளவு சிறப்பான மருத்துவக்குணம் கெடயாது. நெல்லிக்காய்னு சொன்னதுமே நாட்டு நெல்லிக்காய்தான் பலபேரோட ஞாபகத்துக்கு வரும். எலுமிச்சம்பழம் அளவு பெருசா இருக்குமே அந்த நெல்லிக்காய்தான் நான் சொல்லக்கூடியது.
இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிட முடியலைனா பரவாயில்லை. நெல்லிக்காயோட இஞ்சி சேர்த்து அரைச்சி கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை, தேவைப்பட்டா உப்பு சேர்த்து தண்ணி கலந்து சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்துக்கலாம். காலையில டீக்கு பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம் இதயநோய் மட்டுமில்லாம கொழுப்பை குறைக்கும், இதனால தொப்பையும் குறையும்.
நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது. கல்லீரல், கணையத்தை பாதுகாக்கும். அந்த வகையில கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரி செய்யும் நெல்லிக்காய். ஏன்... ரகசியமா வரக்கூடிய எய்ட்ஸ் நோயைக்கூட நெல்லிக்காய் குணப்படுத்தும்னு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா நாம சாப்பிடுற முறையிலதான் எந்த நோயுமே குணமாகும். அதை ஞாபகத்துல வச்சிக்கோங்க.
வெள்ளைப்பூண்டு
இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருப்போம். ஆனா அதே இஞ்சியும், வெள்ளைப்பூண்டும் ஹைபிரஷர்னு சொல்லக்கூடிய உயர் ரத்த அழுத்தத்துக்கு நல்ல மருந்து. ரொம்ப சிம்பிள் போங்க... தினமும் வெள்ளைப்பூண்டை வேக வச்சோ, தீயில சுட்டோ சாப்பிட்டுட்டு வந்தாலே, ஹைபிரஷர் குறையுறதோட இதயத்துக்கும் ரொம்ப நல்லது. அதாவது, ரத்தக்குழாய்ல படியக்கூடிய கொழுப்பை இந்த வெள்ளைப்பூண்டு வெளியேத்திரும்னா பாத்துக்கோங்க..
பச்சையா சாப்பிட்டா அதிக பலன் கிடைக்கும்னு நினைச்சி சிலபேர் வெள்ளைப்பூண்டை பச்சையா சாப்பிடுவாங்க. அது நல்லதில்ல. அதுல உள்ள அமிலம் நேரடியா வயித்துக்குள்ள போனா நிச்சயம் கூடுதலா பிரச்னையை உண்டுபண்ணும். எதை எப்பிடி சாப்பிடணும்னு ஒரு வரைமுறை இருக்கு. அதை ஞாபகத்துல வச்சிக்கோங்க. காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தா பூண்டுச்சாறோட தண்ணி கலந்து குடிச்சிட்டு வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அதுமட்டுமில்ல வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய், வயித்துவலி மாதிரி பல நோய்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்ல மருந்து. நெஞ்சுல சளி பிடிச்சிருந்தா 50 மில்லி பால், 50 மில்லி தண்ணியில 10, 12 பூண்டுப்பல்லை உரிச்சிப்போட்டு வேக வைக்கணும். நல்லா வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கல்கண்டு இல்லைனா சர்க்கரை சேர்த்து அடுப்பில இருந்து இறக்கணும். சூடு ஆறினதும் பருப்பு கடையுற மத்தை வச்சி நல்லா கடைஞ்சி ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா சளி வந்த வழியைப்பார்த்து போயிரும். வாய்வுக்கோளாறு உள்ளவங்க முழு வெள்ளைப்பூண்டை தீயில சுட்டு சாப்பிட்டுட்டு கொஞ்சம் சூடா தண்ணி குடிச்சா நிச்சயமா பலன் கிடைக்கும்.
செம்பருத்தி
செம்பருத்திப்பூ எல்லோருக்கும் தெரியும். ஆனா அந்த பூவோட மகிமை நிறையபேருக்கு தெரியாது. இருதய நோய்க்கு செம்பருத்திப்பூ கைகண்ட மருந்து. ஆனா வீடுகள்ல செம்பருத்தியை அழகுக்காக வளக்குறதோட சரி. அதுலயும் அடுக்கு செம்பருத்தி, மஞ்ச கலர், ரோஸ் கலர்னு நிறைய செம்பருத்தியைத்தான் நிறையபேர் வளக்குறாங்க. இதுல 5 இதழ் உள்ள செம்பருத்திதான் நல்லது. காலைல கண் முழிச்சதும் ரெண்டோ, மூணோ செம்பருத்திப்பூவை எடுத்து அதோட இதழ்களை மட்டும் பறிச்சி சாப்பிட்டு வந்தாலே இருதய நோய் வராது. ஏற்கனவே வந்திருந்தாலும் நோய் குணமாயிரும். வியாதி உள்ளவங்க 6 செம்பருத்தியை கொண்டுவந்து இதழ்களை மட்டும் எடுத்து அது முங்குற அளவுக்கு தாராளமா தண்ணி விட்டு நல்லா காய்ச்சணும்.
இதுல காலைல 6 ஸ்பூன், சாய்ங்காலம் 6 ஸ்பூன்னு 20 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா இருதய படபடப்பு, இருதய வலி, அடைப்பு எல்லாம் சரியாகும். கசாயத்தை குடிக்கும்போது தேவைப்பட்டா சர்க்கரை சேர்த்துக்கிடலாம். பால் சேர்த்தும் சாப்பிடலாம். டீயை மறந்துட்டு செம்பருத்தியை குடிக்கலாம். இதே கசாயத்தை கல்லீரல் பாதிப்பு உள்ளவங்களும், குழந்தைகளுக்கு வரக்கூடிய வயித்துவலி, வயித்துப்போக்கு, வயிறு உப்புசத்துக்கும் கொடுக்கலாம். காசா பணமா? குடிச்சி பாருங்க. நோய் இல்லாதவங்களும் தாராளமா குடிக்கலாம்.
பூவை மாதிரியே இதோட இலைக்கும் மருத்துவக்குணம் இருக்கு. தலையில பொடுகு உள்ளவங்களும், இளநரை, முடி கொட்டுதல் பிரச்னை உள்ளவங்களும் நாலஞ்சு செம்பருத்தி இலையை அம்மியில வச்சி மையா அரைச்சி தலையில தேய்ச்சி அரை மணி நேரம் குளிச்சி பாருங்க, பலன் கிடைக்கும். உள்ளூர்ல கிடைக்குற இந்த அற்புத மூலிகையை விட்டுட்டு ‘அமேசான் காட்டுல உள்ள அபூர்வ மூலிகையால தயாரான எண்ணெய்’னு யாரோ விக்குறதை வாங்கி உங்களை நீங்களே ஏமாத்தணுமா?
இப்பிடி ஆல் இன் ஆல் அழகுராஜாக்களாக உள்ள நெல்லி, வெள்ளைப்பூண்டு, செம்பருத்தியை நம்புங்க. உங்க இதயம் உங்களுக்காக ஒழுங்கா துடிச்சிட்டே இருக்கும்.